25 C
கொழும்பு
வியாழன், டிசம்பர் 29, 2011

அன்றைய தினம் நாட்டை இருளில் மூழ்கடிக்கும் என்கின்றனர் மின்வாரிய தொழிற்சங்கங்கள்

முழு நாட்டையும் இருளில் ஆழ்த்தும் வகையில் நவம்பர் 03ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அனல்மின் நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மீளப்பெறுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் நோக்கில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யுகடனவி மின் உற்பத்தி நிலையத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

எதிர்வரும் 3ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்களும் கொழும்புக்கு வந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளரின் 19 அலுவலகங்களுக்கு முன்பாக போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி நாளை குளியாப்பிட்டிய, குருநாகல், அனுராதபுரம், தங்காலை, காலி, இரத்தினபுரி, பதுளை, திருகோணமலை, கிரிபத்கொட உள்ளிட்ட 19 பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

உங்கள் பதில் என்ன?
பட்டா!
46
குழப்பம் போல் தெரிகிறது!
7
சரி சிரிக்கவும்!
16
ஹ்ம்ம்!
10
மிக சோகமாக!
30
அழுகிய!
87
குஜீதா!
24

வாரத்தில் இதே போன்ற செய்தி வெளியிடப்பட்டது

பதிவு
அறிவிக்க
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா பதில்களையும் காண்க!

எங்கள் சமீபத்திய செய்தி