27 C
கொழும்பு
செவ்வாய், டிசம்பர் 29, 2013
அட்லஸ் விளம்பரம்

முதலாளியின் மகன் பூண்டு மோசடியில் கைது

சதொச பூண்டு மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை நேற்று (22) கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பூண்டு மோசடி தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

25 வயதான சந்தேக நபர் பூண்டு மோசடி தொடர்பான மோசடி ஆவணங்களை தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (23) வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் பதில் என்ன?
பட்டா!
3
குழப்பம் போல் தெரிகிறது!
0
சரி சிரிக்கவும்!
4
ஹ்ம்ம்!
0
மிக சோகமாக!
1
அழுகிய!
3
குஜீதா!
2

வாரத்தில் இதே போன்ற செய்தி வெளியிடப்பட்டது

பதிவு
அறிவிக்க
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா பதில்களையும் காண்க!

எங்கள் சமீபத்திய செய்தி